தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் கலெக்டர் வந்தனா கார்க் தொடங்கிவைத்தார்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் கலெக்டர் வந்தனா கார்க் தொடங்கிவைத்தார்
திருவண்ணாமலை செப்.29
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப்விஜய், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து;கொண்டு கலெக்டர் வந்தனா கார்க் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கிவைத்து மோதிரங்களை குழந்தைகளின் தாய்மார்களிடம் நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆர்.அபிஷேக் எம்எல்ஏ, சுகாதாரத்துறை இந்நிகழ்ச்சியில் கூடுதல் இயக்குநர் ப.சம்பத், நலப்பணிகள் இணை இயக்குநர் கவிதா, மாவட்ட சுகாதார அலுவலர் வெங்கட்ரமணன், திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் எட்வின்வசந்தா, மருத்துவமனை தலைமை மருத்துவர் மாலதி, தவெக தெற்கு மாவட்ட செயலாளர் கே.பாரதிதாசன், மாமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.பழனி, மாவட்ட இணை செயலளர் எஸ்.கலைச்செல்வன், மாவட்ட பொருளாளர் கே.இளங்கோவன், கமலாபீடம் நிறுவனர் சீத்தா சீனுவாசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.