Loading...

திண்டுக்கல் அனுகிரகா கல்லூரி லியோ சங்க பதவியேற்பு விழா

A

Admin

October 16, 2026 • 11:31 AM

திண்டுக்கல் அனுகிரகா கல்லூரி லியோ சங்க பதவியேற்பு விழா

திண்டுக்கல் அனுகிரகா கல்லூரி லியோ சங்க பதவியேற்பு விழா

திண்டுக்கல், அக்.17-

பன்னாட்டு அரிமா சங்கங்கள் 3242 பி மாவட்டம், திண்டுக்கல் அனுகிரகா கல்லூரி லியோ சங்கம், திண்டுக்கல் மெட்ரோ அரிமா சங்கத்தின் ஆதரவுடன் 2026-2027-ம் ஆண்டுக்கான லியோ சங்க பதவியேற்பு விழா திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள நொச்சி ஓடைப்பட்டி அனுகிரகா கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மெட்ரோ அரிமா சங்க தலைவர் லயன் டாக்டர் எஸ்.சகாய செல்வராஜ் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மெட்ரோ அரிமா சங்க செயலாளர் லயன் எம்.சுந்தர், பொருளாளர் லயன் கே.சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை பொருளாளர் லயன் கே.ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக 3242-பி மாவட்ட ஆளுநர் லயன் டாக்டர் என்.ஆறுமுகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, புதிய நிர்வாகிகளாக 2026-2027-ம் ஆண்டு லியோ சங்க தலைவராக லியோ ஆர்.ஹரிஹரன், செயலாளராக லியோ ஏ.ஜெரோம் எபினேசர், பொருளாளராக லியோ எஸ்.தேவதர்ஷினி ஆகியோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மாவட்ட லியோ சங்க தலைவர் லயன் டாக்டர் சி.ஆர்.பழனிவேல் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை இணைத்து வைத்தார்.

இதில் அனுகிரகா கல்லூரி செயலர் அருட்தந்தை முனைவர் ஜே.ஜான் பிரிட்டோ, கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் ஜே.ஜார்ஜ் பெர்னாட்ஷா, மாவட்ட ஜி.எம்.டி. ஒருங்கிணைப்பாளர் லயன் கே.சுப்புராஜ், மாவட்ட ஜி.ஏ.டி. ஒருங்கிணைப்பாளர் லயன் அசோக் பெருமாள், 3242-பி மாவட்ட ஜி.ஏ.டி. ஒருங்கிணைப்பாளர் லயன் பொறியாளர் கே.ஏ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக வட்டார தலைவர் வட்டாரம்-36 லயன் ஜி.ராதாகிருஷ்ணன், லயன் ராஜேந்திரகுமார், லியோ கிளப் ஒருங்கிணைப்பாளர் லயன் எஸ்.இளங்கோவன், லயன் டி.செல்வேந்திரன், லயன் ஆர்.நந்தகுமார், உதயம் லயன்ஸ் ஜி.முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பல்திறன் பேச்சாளர் யு.ஜெயசுதா கலந்து கொண்டு சிறப்பாக பேசினார். முடிவில் லியோ சங்க ஆலோசகர் பேராசிரியர் ஏ.வனராஜ் நன்றியுரை கூறினார்.

- Advertisement -