திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட திட்ட பணிகளை பக்தர்கள் பயன்பாட்டிற்குத் அமைச்சர்கள் தொடங்கி வைத்த அமைச்சர்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட திட்ட பணிகளை பக்தர்கள் பயன்பாட்டிற்குத் அமைச்சர்கள் தொடங்கி வைத்த அமைச்சர்
திருச்செந்தூர் அக் 11
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட 5 பணிகள் பக்தர்கள் பயன்பாட்டிற்குத் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா தொடங்கி வைத்தார்.
திருக்கோயிலில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் ஒரு பகுதியாக, ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் ராஜ கோபுரத்திற்கு அருகில் கருங்கல்லால் ஆன யாகசாலை மண்டபம் அமைக்கும் பணி, மற்றும் ஒரே நேரத்தில் 8 பயனாளிகள் பயன்படுத்தும் வகையிலான சுகாதார வளாகம் ஒன்றை அனுகிரக விலாசம் அருகில் ரூபாய் 24 லட்சம் மதிப்பீட்டில் கட்டும் பணி மற்றும் ஒரே நேரத்தில் 47 பயனாளிகள் பயன்படுத்தும் வகையில் ரூபாய் 98 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயிலின் வடக்கு நுழைவாயில் அருகில் சுகாதார வளாகம் கட்டும் பணி மற்றும் ஒரே நேரத்தில் 64 பயனாளிகள் பயன்படுத்தும் வகையில் ரூபாய் 1.74 கோடி மதிப்பீட்டில் திருக்கோயில் அன்னதானக் கூடத்திற்குப் பின்புறம் சுகாதார வளாகம் கட்டும் பணி மற்றும் இடும்பன் கோவில் அருகில் ரூபாய் 1.14 கோடி மதிப்பீட்டில் பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் கைபேசி பாதுகாப்பு மையம் கட்டும் பணி
ஆகிய பணிகள் முடிவுற்றன.
இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட பணிகளைப் பக்தர்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோர், திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இரா. அருள்முருகன் மற்றும் அறங்காவலர்கள் வனிதா,
செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில், ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டனர்.
இந்த
நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் அருணாசலம் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், திருக்கோயில் துணை ஆணையர் யக்ஞ நாராயணன் திருச்செந்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் கௌதம், திருக்கோயில் உதவி ஆணையர் சி. லோகநாதன், திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் ஈழவேந்தன், தமிழக வெற்றி கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் மற்றும் த.வெ.க ஒன்றிய,நகர பொறுப்பாளர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள், திருக்கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.