Loading...

திருவண்ணாமலையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை யொட்டி சிறப்பு யாகம் - ரத்ததானம்

A

Admin

October 11, 2026 • 01:39 PM

திருவண்ணாமலையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை யொட்டி சிறப்பு யாகம் - ரத்ததானம்

திருவண்ணாமலையில்
விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை யொட்டி
சிறப்பு யாகம் - ரத்ததானம்


திருவண்ணாமலை அக்.12-


திருவண்ணாமலையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை யொட்டி உலக நன்மைக்காக சிறப்பு யாகமும், இன்னொரு உயிரை காத்திட ரத்ததான முகாமும் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட தென்னிந்திய விஸ்வகர்மா கட்டுமான அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் மற்றும் விஸ்வகர்மா செழு மரபினர்கள் சார்பில் 8-ஆம் ஆண்டு விஸ்வகர்மா ஜெயந்தி விழா திருவண்ணாமலை தேரடி வீதியிலுள்ள விஸ்வ பிராமணர் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது.
விழாவுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சக்திவேல் ஆச்சாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.ஜீவரத்தினம் ஆச்சாரி முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஏ.சங்கர் ஆச்சாரி வரவேற்றார்.
விழாவை சீனந்தல் வேதபாடசாலை முதல்வர் ஸ்ரீசிவ.சிவஞானசேகர் துவக்கி வைத்தார்.
விழாவில் உலக நன்மைக்காக விசேஷ திரவியங்களை கொண்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரத்ததான முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் அர்ச்சனா தலைமையிலான மருத்துவ குழுவினர் 30 பேரிடமிருந்து ரத்த தானம் பெற்றனர். தானம் பெறப்பட்ட ரத்தம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விழாவில் சங்கத்தின் மாநில தலைவர் எம்.ஆரோக்கியசாமி, மாநில பொருளாளர் எஸ்.கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் கே.அண்ணாதுரை, மாவட்ட இணை செயலாளர் ஜி.ஏழுமலை, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் எஸ்.சுதாகர், நகரத் தலைவர் எம்.அன்பு, துணைத் தலைவர் எஸ். பலராமன், நகர அமைப்பாளர் வி.செல்வம் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர செய்தி தொடர்பாளர் டி.ஜெயக்குமார் நன்றி கூறினார்.

- Advertisement -