திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட புதுவாயல் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி திருக்கோயில் நூதன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட புதுவாயல் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி திருக்கோயில் நூதன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழும் மங்களகரமான பராபவ வருடம் தட்சிணாயன காலம் ஐப்பசி மாதம் எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுக்ல பட்ஷ பௌர்ணமி திதி ரேவதி நட்சத்திரம் வணிசை கரணம் துலாம் லக்கினம் அமிர்த யோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கிராம தேவி மண்ணடியம்மனுக்கு மூன்று நாட்களாக வேத மந்திரங்கள் சிவாச்சாரியார்கள் மூலம் மந்திரங்கள் ஓதப்பட்டு வானவேடிக்கை மேல தாளங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.சாமி அலங்காரம் தீபாராதனை நடைபெற்று புதுவாயல் ஊராட்சி மன்ற தலைவர் ஏ. சதீஷ்குமார் அவருக்கு ஆலயம் சார்பில் மாலை அணிவித்து கலசம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது, மேலும் வருகை தந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.ஆலய நிர்வாகிகள் துரைராஜ், முரளி, புருஷோத்தமன், செல்வம், விஜய், ரஞ்சித் குமார், தமிழரசு, கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினர், மேலும் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், டிசி.மகேந்திரன், தமிழக வெற்றிக் கழக கும்முடிபூண்டி தெற்கு ஒன்றிய இளைஞரணி, வெற்றி திலகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,