தேசிய ஊட்டச்சத்து மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி! அக் 29 தேனி மாவட்டம்
தேசிய ஊட்டச்சத்து மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி! அக் 29 தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வ. சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையேற்று, கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார்கள். இப்பேரணியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர். ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தி அவர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர். பங்களா மேடு பகுதியில் தொடங்கிய இப்பேரணி, நேரு சிலை வழியாகச் சென்று தேனி பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ரேவதி மற்றும் பல அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.