தேர்தல் ஆணையம் மீதான காங்கிரஸின் அவதூறு: தேனியில் பாஜக மாவட்டத் தலைவர் இராஜபாண்டியன் கடும் தாக்கு!
தேர்தல் ஆணையம் மீதான காங்கிரஸின் அவதூறு: தேனியில் பாஜக மாவட்டத் தலைவர் இராஜபாண்டியன் கடும் தாக்கு!
அக் 03
அரசியல் களத்தில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளின் விரக்தியால், இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் கட்சி தேவையற்ற மற்றும் அடிப்படையற்ற பழிகளைச் சுமத்தி வருவதாக பாரதிய ஜனதா கட்சி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் வெளிப்படையான செயல்பாடுகள், அதன் உண்மை நிலவரம் மற்றும் இது தொடர்பான மாண்புமிகு நீதிமன்றத்தின் தெளிவான கருத்துக்களைப் பொதுமக்களுக்கு விரிவாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில், தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சிறப்புப் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
தேனி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இச்செய்தியாளர் சந்திப்பிற்கு, மாவட்டத் தலைவர் திரு. இராஜபாண்டியன் அவர்கள் தலைமை தாங்கினார்.
இச்சந்திப்பின் போது நிர்வாகிகளுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்டத் தலைவர், காங்கிரஸ் கட்சியின் போலிப் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் கட்சி எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், தேர்தல் அமைப்பின் நம்பகத்தன்மை குறித்தும் விரிவான விளக்கங்களை அளித்தார்.
இந்நிகழ்வில் மாவட்டப் பொதுச்செயலாளர் வினோத்குமார் மாவட்டத் துணைத் தலைவர்கள் செல்வராணி மோகன் தாஸ் பெரியகுளம் கோவிந்தராஜ் மற்றும் அலுவலகச் செயலாளர் தேவகுமார் உள்ளிட்ட முக்கியச் செயலாளர்கள், மாவட்ட/ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பெருந்திரளான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.