Loading...

நத்தம் கிராமத்தில் தென்னை வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டும் பொறி – மாணவர்கள் செயல்விளக்கம்

A

Admin

October 21, 2026 • 03:49 AM

நத்தம் கிராமத்தில் தென்னை வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டும் பொறி – மாணவர்கள் செயல்விளக்கம்

நத்தம் கிராமத்தில் தென்னை வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டும் பொறி – மாணவர்கள் செயல்விளக்கம். 


ராமநாதபுரம் 


ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வட்டாரத்திற்கு உட்பட்ட நத்தம் கிராமத்தில் தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்கள் மற்றும் அசுவினி போன்ற சாறு உறிஞ்சும்பூச்சிகளை கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்துவது குறித்தசெயல் விளக்கம் கமுதி நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் சார்பில் நடைபெற்றது.

தென்னை சாகுபடியில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகரிக்கும்போது, அவை இலைகளிலிருந்து சாற்றை உறிஞ்சி மரங்களின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. மேலும், இப்பூச்சிகள் வெளியேற்றும் தேன் போன்றபிசுபிசுப்பான திரவத்தின் மீது கரும்பூஞ்சை படர்வதால், இலைகளின் ஒளிச்சேர்க்கைத் திறன் குறைகிறது. இதன் காரணமாக தென்னைமரங்களின் வளர்ச்சியும் காய்ப்புத்திறனும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதனைத் தொடர்ந்து, வெள்ளை ஈக்களைக் கண்காணிக்கவும் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கவும் மஞ்சள் ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்தும் முறை குறித்து மாணவர்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். மஞ்சள் நிறத்தால் கவரப்படும் வளர்ந்த வெள்ளை ஈக்கள் ஒட்டும் தாள்களில் சிக்குவதால், பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கவும் இப்பொறிகள் உதவுகின்றன என விளக்கப்பட்டது மேலும், மஞ்சள் ஒட்டும் பொறிகளைத் தோட்டத்தில் பொருத்தும் முறை, அவற்றின் சரியான பராமரிப்பு மற்றும் பயன்பாட்டின்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பொறிகளில் அதிக அளவில் பூச்சிகள் ஒட்டியிருந்தாலோ அல்லது தூசி படிந்து ஒட்டும் தன்மை குறைந்தாலோ, அவற்றை மாற்றிப் புதிய பொறிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இயற்கைச் சூழலுக்கு உகந்த பூச்சி மேலாண்மை முறைகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை எடுத்துரைத்த மாணவர்கள், மஞ்சள் ஒட்டும் பொறிகளை மற்ற ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளுடன் இணைத்துப் பயன்படுத்துமாறு விவசாயிகளைக் கேட்டுக்கொண்டனர். இச்செயல்விளக்கம் தென்னை விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூச்சித் தாக்குதலைக் கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கான நடைமுறை அறிவைப் பெற உதவியது.

- Advertisement -