பகல்கோடுமந்து சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்குழுவிற்க்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
பகல்கோடுமந்து சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்குழுவிற்க்கு புதிய நிர்வாகிகள் தேர்வு அதில் புதிய தலைவராக மணி நோர்தே குட்டன் பொறுப்பேற்பு
ஊட்டி::செப்:25
நீலகிரி மாவட்டத்தில் வனத்துறையின் கீழ் உள்ளூர் கிராம மக்கள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சூழலியலைப் பாதுகாக்கவும் 2012-ஆம் ஆண்டு முதல் பல்வேறு சூழல் மேம்பாட்டு குழுக்கள் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.
இதில் பகல் கோடு மந்து சூழல் மேம்பாட்டு குழு, கடந்த 2012 முதல் புல்வெளி பாதுகாப்பு, நர்சரி அமைத்து மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்தல், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் மற்றும் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல் எனப் பல்வேறு சிறப்பான பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இக்குழுவின் சிறந்த சுற்றுச்சூழல் மற்றும் சமூகச் சேவையைப் பாராட்டி, 2022-ஆம் ஆண்டு தமிழக அரசின் ‘பசுமை முதன்மையாளர் விருது’ (Green Champion Award) வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டு ‘சமூக தலைமைத்துவ விருது’ (Community Leadership Award) பெற்றும் இக்குழு சாதனை படைத்துள்ளது.
தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் வடஇந்திய மொழிகள் உட்படப் பல திரைப்படங்களின் படப்பிடிப்பு தளமான புகழ்பெற்ற ‘ஷூட்டிங் ஸ்பாட்’ பகுதியைச் சிறப்பாகப் பராமரித்து வரும் இக்குழுவின் புதிய நிர்வாக உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
பைக்காரா வனச்சரக அலுவலர் தேர்தல் அலுவலராக இருந்து நடத்திய இத்தேர்தலில், மணி நோர்தே குட்டன் புதிய தலைவராக தேர்தலில் தேர்வு செய்யப்பட்டுப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலகக் கண்காணிப்பாளர், வனவர், வனக்காப்பாளர் மற்றும் 42 சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.