Loading...

பக்தர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட பணியாளர் தற்காலிக பணி நீக்கம்

A

Admin

October 04, 2026 • 05:24 PM

பக்தர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட பணியாளர் தற்காலிக பணி நீக்கம்

பக்தர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட பணியாளர் தற்காலிக பணி நீக்கம்

ஸ்ரீரங்கம் அக் :5

பக்தர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட பணியாளர் தற்காலிக பணிநீக்கம் செய்ய பக்தர்களிடம், திருக்கோயில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு புரட்டாசி மாதம் மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு தரிசனத்திற்க்கு வந்த பக்தர்களிடம் கடுமையாக நடந்த விதம் பணியாளர் சரவணகுமார் கடுமையாக நடந்து கொண்டதாகக் காணப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.
இதனைத் தொடர்ந்து, திருக்கோயில் நிர்வாகத்தால் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், சம்பந்தப்பட்ட பணியாளரின் நடத்தை திருக்கோயிலின் மாண்பிற்கும், திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களிடம் கடைப்பிடிக்க வேண்டிய மரியாதையான அணுகுமுறைக்கும் புறம்பானது என உறுதி செய்யப்பட்டது.
பணியாளர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தி, ஒழுங்கு செய்து திருக்கோயில் நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் இதையடுத்து, சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளது.
திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களை மரியாதையுடனும், கனிவுடனும் நடத்த வேண்டும் என திருக்கோயில் பணியாளர்கள் அனைவருக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வறிவுறுத்தலுக்கு மாறாக செயல்பட்டதன் காரணமாக சம்பந்தப்பட்ட பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -