பசும்பொன்னில் ஆசாத் ஹிந்த் குருபூஜை தொண்டர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
பசும்பொன்னில் ஆசாத் ஹிந்த் குருபூஜை தொண்டர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகின்ற அக்டோபர் 28,29,30 ம் தேதிகளில் நடைபெறும் சுதந்திர போராட்ட தலைவர் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் கோவில் வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினருடன் இணைந்து இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் . G. சந்தீஷ் வழிகாட்டுதலின் படி தொடர்ந்து 4 வது ஆண்டாக பங்கேற்க இருக்கும் தன்னார்வ தொண்டர்களுக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயம் எதிரே அமைந்துள்ள தியான மண்டபத்தில் நற்பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர்விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு குருபூஜைக்கு வருகை தரக்கூடிய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி அமைதியான முறையில் பசும்பொன் வந்து வணங்கிச் செல்ல வேண்டுமென பொது மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஜெயந்தி விழாவில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான பணிகளை ஆற்றி வரும் அனைத்து அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இப்பயிற்சி முகாமில் 60 க்கும் மேற்பட்ட கிராமங்களைசேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்பங்கேற்றனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கும் பசும்பொன் வருகை தந்த பொதுமக்கள் 200 பேருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .கமுதி.மாயகிருஷ்ணன் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.