Loading...

பந்தல்குடி கால்வாய் பணியில் ஈடுபட்ட ஜேசிபி இயந்திரம் மூழ்கியது

A

Admin

October 26, 2026 • 03:45 AM

பந்தல்குடி கால்வாய் பணியில் ஈடுபட்ட ஜேசிபி இயந்திரம் மூழ்கியது

பந்தல்குடி கால்வாய் பணியில் ஈடுபட்ட ஜேசிபி இயந்திரம் மூழ்கியது:


மதுரைஅக்26


மதுரை மாநகர், தல்லாகுளம் செல்லூர் கோரிப்பாளையம் ரயில்வே நிலையம் புதூர் மாட்டுத்தாவணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 5 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

 மதுரை பந்தல்குடி கால்வாயில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென பெய்த கன மழை காரணமாக கால்வாய்க்குள் மழை நீர் வெள்ளம் போல புகுந்து சென்றதால் கால்வாய் பணிகளில் ஈடுபட்டிருந்த ஜேசிபி இயந்திரம் முழுவதிலும்மாக 

நீரில் மூழ்கியது.

 இதேபோன்று கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் உள்ளிட்ட அனைத்தும் நீரில் மூழ்கிய நிலையில் தற்போது வெள்ள நீரை மோட்டார் மூலமாக வெளியேற்றி ஜேசிபி இயந்திரத்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து ,

பந்தல்குடி கால்வாயில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அருகில் இருக்கக்கூடிய குடியிருப்புகளுக்குள் செல்வதால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்து வருகின்றனர்.

- Advertisement -