பாலக்கோடு அருகே டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்விப்பு
பாலக்கோடு அருகே டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்விப்பு
தருமபுரி அக் 16
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எலுமிச்சனஹள்ளி கிராமத்தில்
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் 95 வது பிறந்த நாளை முன்னிட்டு வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சென்னமூர்த்தி தலைமையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் தலைமை ஆசிரியர் செல்வி, கிராம நிர்வாக அலுவலர் வெங்கட், உதவி பிடிஓ சின்னசாமி, கவிதா பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்ட டாக்டர் கலாம் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அனிவித்து
மலர் துவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ், மாதேஷ், மாதையன், முத்தையன், முருகன், சரவணன், முனிரத்தினம், ஜோதி,ரிஷிகுமார், உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மணவர்கள் கலந்து கொண்டனர்.