பூவந்தி அருகே பொட்டாசியம் குளோரைடு ஏற்றி வந்த லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து. ஓட்டுநருக்கு தலையில் காயம்
பூவந்தி அருகே
பொட்டாசியம் குளோரைடு ஏற்றி வந்த லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து. ஓட்டுநருக்கு தலையில் காயம்
திருப்புவனம் செப் 19
சிவகங்கை மாவட்டம்
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூவந்தி அருகே பொட்டாசியம் குளோரைடு ஏற்றி வந்த லாரி சாலை நடுவில் உள்ள செண்டர் மீடியாவின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் லாரியின் டீசல் டேங்கில் இருந்து டீசல் வெளியேறி சாலை முழுவதும் சென்றதை அடுத்து தீயணைப்பு துறையினர் நுரையை பீய்ச்சி அடித்து பாதுகாப்பு ஏற்படுத்தினர்.
மேலும் இது குறித்த தகவல்
காரைக்காலில் இருந்து ரகுவரன் என்பவருக்கு சொந்தமான லாரி ஒன்று பொட்டாசியம் குளோரைடு வேதிப்பொருளை ஏற்றிக்கொண்டு சிவகங்கை வழியாக விருதுநகர் நோக்கி சென்றது. லாரியை சுரேஷ் என்கிற ஓட்டுநர் இயக்கி வந்துள்ளார். இந்த லாரியானது பூவந்தி அருகே உள்ள ஏனாதிப் பகுதியில் வரும் பொழுது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள செண்டர் மீடியனில் மோதி கவிழ்த்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் அங்கிருந்த பொது மக்களால் மீட்கப்பட்டு பூவந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் கவிழ்ந்த லாரியில் இருந்து டீசல் டேங்க் உடைந்து அதிலிருந்த டீசல் முழுமையாக வெளியேறி சாலை முழுவதும் ஓடியது. இதனை அடுத்து பொது மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நுரையை அடித்து டீசலை பாதுகாப்பான முறையில் அகற்றினர். இது சம்பந்தமாக பூவந்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.