பென்னாகரத்தில் பாரம்பரியக் கலைகளால் விழிப்புணர்வு ஏற்படுத்திய 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள்
பென்னாகரத்தில்
பாரம்பரியக் கலைகளால் விழிப்புணர்வு
ஏற்படுத்திய 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள்!
பென்னாகரம் அக்.19-
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள சின்னம்பள்ளி உயர்நிலை பள்ளி வளாகத்தில், இம்பாசிபிள் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் மேச்சேரி சிலம்பாட்ட நற்பணி குழு இணைந்து நடத்திய, சிலம்பாட்ட உலக சாதனை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்
பங்கேற்று தொடங்கிய நிகழ்ச்சியில், மாணவர்கள் பாரம்பரிய வீரக் கலை சிலம்பத்தையும் மரக்கன்றையும் ஒரே நேரத்தில் ஏந்தி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மரம் வளர்ப்பின் அவசியம், மரங்களை வெட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள், இயற்கையையும் சுற்றுச் சூழலையும் பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து
மரக்கன்றுகளை நட்டு, முறையாக பராமரித்து வளர்த்தால் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க முடியும் எனவும் வலியுறுத்தினர். அதே நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பரதநாட்டியத்தையும் இலக்கியக் கலைகளின் சிறப்பையும் வெளிப்படுத்தினர். பரதநாட்டியம் மூலம் இந்திய பாரம்பரியம், பண்பாடு, ஆன்மிகக் கருத்துகள் ஆகியவை படைக்கப்பட்டன. சிலம்பம் உடல் பலத்தையும் மன ஒழுக்கத்தையும் வளர்க்கும் பாரம்பரிய தற்காப்பு கலையாக, இளம் தலைமுறையினரின் கவனம், உடல் ஒருங்கிணைப்பு, தன்னம்பிக்கை வளர்ச்சிக்குப் பெரிதும் நம்பிக்கை ஏற்படுத்தியது.
விழா நிறைவில்
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற
பென்னகரம் சட்டசபை உறுப்பினர் கஜேந்திரன் சிலம்பம் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினார்.