போச்சம்பள்ளி எம்.ஜி.எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 12-ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி
போச்சம்பள்ளி எம்.ஜி.எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 12-ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி
போச்சம்பள்ளி அக்:15
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் எம்.ஜி.எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி மிகச் சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்பட்டது. பள்ளிச் சேர்மன் பன்னீர், தாளாளர் மாதவி பன்னீர் மற்றும் பள்ளியின் சி.இ.ஓ செந்தூரி சரவணகுமார் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இவ்விளையாட்டுப் போட்டிகள் சிறப்பான முறையில் நடத்தப்பட்டன. இவ்விழாவை பள்ளியின் துணை இயக்குநர் செல்வராஜ் துவக்கி வைத்தார். விழாவின் சிறப்பு அழைப்பாளராக போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் .வனிதாமணி கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தார். இப்போட்டிகளில் மாணவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், கைப்பந்து கோ-கோ, 500 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம், டென்னிஸ் மற்றும் செஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பள்ளி மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு அழைப்பாளர் காவல் ஆய்வாளர் வனிதாமணி, பள்ளியின் தாளாளர் திருமதி. மாதவி பன்னீர் மற்றும் சி.இ.ஓ செந்தூரி சரவணகுமார் ஆகியோர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினர். விழாவின் நிறைவாக, பள்ளி முதல்வர் S.ஹசினாபேகம் கலந்து கொண்ட அனைவருக்கும் தனது நன்றியுரையினைத் தெரிவித்துக் கொண்டார்.