மக்கள் தொகை கணக்கெடுப்பில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளையும் இணைக்க வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்
மக்கள் தொகை கணக்கெடுப்பில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளையும் இணைக்க வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் மதுரை
செப் 30
கணக்கெடுப்பு திட்டத்தை ஒன்றிய அரசு அடுத்த ஆண்டு மக்கள் தொகை இந்தியா முழுவதும் நடத்த உள்ளதாக அறிகிறோம் இந்த கணக்கெடுப்பானது நமது அதற்கான மாவட்டத்திலும் தங்களின் தலைமையில் செயல்படுத்தவுள்ளதாகவும் பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம் . இந்நிலையில், ஒன்றிய அரசு மாற்றுத்திறனாளி சட்ட ம் 2016 வகுத்துள்ள வகையான மாற்றுத்திறனாளிகளை தனித்தனியாக கணக்கெடுப்பதற்கு பதிலாக அவற்றை 9 வகையாக சுருக்கி மாற்றுத்திறனாளிகள் சட்டத்திற்கு விரோதமாக கணக்கெடுக்க உள்ளதாக அறிகிறோம் இவ்வாறு செய்வது மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அவர்களைப் பற்றிய துல்லியமான விபரங்களை சேகரிக்க எந்த வகையிலும் உதவி செய்யாது. எனவே, இவ்விசயத்தில் தலையிட்டு அடுத்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் கீழ்க்கண்ட அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளையும் தனித்தனியாக கணக்கெடுக்க வழிவகை செய்யவும், இப்பிரச்சனை தொடர்பாக ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
1. இயக்கத்திறன் குறைபாடு
2. தொழுநோய் பாதிக்கப்பட்டவர்
3. பெருமூளை வாதம்
4. தசைச்சிதைவு நோய்
5. குள்ளத்தன்மை / உயரம் குறைபாடு
6. அமில தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள்
7. முழு பார்வையின்மை 8. குறைந்த பார்வைத்திறன்
9. காது கேளாமை
10. குறைந்த செவித்திறன்
11. பேச்சு மற்றும் மொழி குறைபாடு
12. அறிவுசார் குறைபாடு
13. குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகள்
14. புற உலக பற்று அற்ற நிலை / ஆட்டிசம்
15. மனநல குறைபாடு
16. பல்குவளை நரம்பு தளர்ச்சி
17. பார்க்கின்சன் நோய்
18. ஹூமோபீலியா
19. தலீசீமியா
20.அரிவாள் செல் நோய்
21. பல்வகை மாற்றுத்திறன்கள்,
செவிப்பார்வையின்மை ஆனால், தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பில் கீழ்க்கண்ட 9 வகையான மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பதிவு செய்ய வழிகாட்டுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
1. பார்வைத்திறன் குறைபாடு
2. செவித்திறன் குறைபாடு
3. பேச்சு குறைபாடு
4. இயக்கத்திறன் குறைபாடு
5.அறிவுசார் குறைபாடு
6. அமில தாக்குதலால் ஏற்பட்ட மாற்றுத்திறன்
7. மனநல குறைபாடு
8. நாள்பட்ட நரம்பியல் நோய்
9. இரத்த கோளாறு