Loading...

மண்டலமாணிக்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் தயாரித்த பாரம்பரிய சிறுதானிய ஊட்டச்சத்து உணவு போட்டி

A

Admin

November 05, 2026 • 06:23 AM

மண்டலமாணிக்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் தயாரித்த பாரம்பரிய சிறுதானிய ஊட்டச்சத்து உணவு போட்டி

மண்டலமாணிக்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர்கள்

தயாரித்த பாரம்பரிய சிறுதானிய ஊட்டச்சத்து உணவு போட்டி 


கமுதி 


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மண்டலமாணிக்கத்தில், மகளிர் சுய உதவி குழுவினர்கள் தயாரித்த பாரம்பரிய சிறுதானிய உணவு போட்டி நடைபெற்றது.

கமுதி அருகே மண்டலமாணிக்கத்தில்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பாரம்பரிய சிறுதானிய ஊட்டச்சத்து உணவு போட்டி நடைபெற்றது. இந்த வாழ்வாதார இயக்கத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த ஏராளனமான பெண்கள் கலந்து கொண்டு, 100 வகையான சிறுதானிய உணவு வகைகள் தயாரித்து உணவு திருவிழா கண்காட்சி போல் வைத்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா தலைமை தாங்கி, உணவு திருவிழா போட்டியை துவக்கி வைத்தார்.மேலும்

ஊட்டச்சத்து மிகுந்த சிறு தானிய உணவு வகைகளின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார்.

ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் மயில்ராஜ் முன்னிலைவகித்தார் .இப் போட்டியில் எள்ளுருண்டை, வாழைப்பூ வடை, கேழ்வரகு அடை, உளுந்துகஞ்சி, சோள உப்புமா, கப்பங்கஞ்சி,

குதிரைவாலி அரிசி சோறு, கேழ்வரகுகளி, திணை மாவு, வரகுஅரிசிபாயாசம், குதிரைவாலி தேங்காய் சாதம், வாழைக்காய் புட்டு, கருப்புகவுனி பணியாரம், வரகு பிரியாணி, ராகி அடை, உளுந்து பாயாசம், பச்சை பயறு தோசை, ராகி சிமிலி, கேழ்வரகு சேவு,

கோதுமை சுவியம், கம்பு அரிசி லட்டு, கேழ்வரகு இடியாப்பம், திணை உப்புமா உட்பட

பல்வேறு வகையான ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள்,பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சமைத்து கண்காட்சியில் வைத்திருந்தனர். கண் காட்சியாக வைக்கப்பட்ட இந்த உணவுகளின் சத்துகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. துரித உணவுகள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, குழந்தை களின் வளர்ச்சிக்காகவும், சக்திக்காகவும் பாரம்பரிய உணவுகள் உட்கொள்வதை பின்பற்ற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் இந்த உணவு திருவிழாவை ஏற்பாடு செய்யப்பட்ட தாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர்

மாரிமுத்து

செய்திருந்தார். இந்த

சிறுதானிய உணவு போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப் பட்டது. இறுதியில் ஊராட்சி செயலர் மூர்த்தி நன்றி கூறினார் இதேபோல் நீராவி, 

மேலராமநதி, வலைய பூக்குளம் ஆகிய கிராமத்தில் இந்த சிறுதானிய ஊட்டச்சத்து உணவு போட்டி நடைபெற்றது

- Advertisement -