Loading...

மதுரை ,வண்டியூரில் வைகை விஸ்வகர்மா அறக்கட்டளையின் 6-ஆம் ஆண்டு ஸ்ரீ விஸ்வகர்மா சமேத ஸ்ரீ காயத்ரி தேவி ஆராதனை விழா, மற்றும் விஸ்வபிரம்மா ஜெயந்தி விழா

A

Admin

October 11, 2026 • 01:43 PM

மதுரை ,வண்டியூரில் வைகை விஸ்வகர்மா அறக்கட்டளையின் 6-ஆம் ஆண்டு ஸ்ரீ விஸ்வகர்மா சமேத ஸ்ரீ காயத்ரி தேவி ஆராதனை விழா, மற்றும் விஸ்வபிரம்மா ஜெயந்தி விழா

*மதுரை ,வண்டியூரில் வைகை விஸ்வகர்மா அறக்கட்டளையின் 6-ஆம் ஆண்டு ஸ்ரீ விஸ்வகர்மா சமேத ஸ்ரீ காயத்ரி தேவி ஆராதனை விழா, மற்றும் விஸ்வபிரம்மா ஜெயந்தி விழா*



மதுரை அக் 12 

மதுரை ,

வண்டியூரில் வைகை விஸ்வகர்மா அறக்கட்டளையின் 6-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 

ஸ்ரீவிஸ்வகர்மா சமேத ஸ்ரீகாயத்ரி தேவி ஆராதனை விழாவும், விஸ்வபிரம்மா ஜெயந்தி விழாவும் , வைகை விஸ்வகர்மா அறக்கட்டளையின் சார்பில் நிறுவனத்

தலைவர் க.தாமோதரன் பொருளாளர் ஞானேஸ்வரன் செயலாளர் முத்துராசு ஆகியோர் தலைமையில் 

பாலசுப்பிரமணியன் ஸ்ரீதரன் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் 

வெகு சிறப்பாக 

நடைபெற்றது.


இந்த விழாவில் 

அதிகாலை கணபதி ஹோமம் நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக 

சுயம்வரம் நிகழ்ச்சியும் நடந்தது இதில் பல்வேறு மாவட்டங்களில் வருகை புரிந்த பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார்கள்‌ சுமார் 200 க்‌கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அவர்களது பிள்ளைகளுக்கு வரன்கள் குறித்து கலந்துரையாடல் செய்து கொண்டனர். 

. அதனைத் தொடர்ந்து 

இந்த விழாவில் குறிப்பாக 

விஸ்வகர்மா சமுதாயத்தை சார்ந்தவர்கள் மத்திய மாநில அரசு துறைகளில் பல்வேறு உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களும் வருகை புரிந்து சிறப்பித்தனர்.


இந்த நிகழ்வில் 

ஒரு சிறப்பு என்னவென்றால் பொதுவாக விழாவிற்கு வருகை தரும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்களுக்கு நிகழ்ச்சியாளர்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பது யாவரும் அறிந்த ஒன்று ஆனால் 

இந்த விழாவில் 

வருகை புரிந்தவர்களுக்கு வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில்  

திருவாசகம் நூல்கள் வழங்கி மகிழ்வித்தனர்.

மேலும் 

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வைகை விஸ்வகர்மா அறக்கட்டளை நிறுவனத்தின் சார்பில் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது‌.


இவ்விழாவில் கிருஷ்ணமூர்த்தி 

மணிகண்டன் 

கருப்பணன் பாலமுருகன ஆகியோர் உட்பட பெருந்திரளான விஸ்வகர்மா சமுதாயத்தினர் சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.


இதற்கான ஏற்பாடுகளை வைகை விஸ்வகர்மா அறக்கட்டளையின் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.

- Advertisement -