Loading...

மதுரை காமராஜர் சாலையில் உள்ள சௌராஷ்ட்ரா சங்கம் 2026-2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு

A

Admin

October 07, 2026 • 01:32 PM

மதுரை காமராஜர் சாலையில் உள்ள சௌராஷ்ட்ரா சங்கம்  2026-2028 ஆம்  ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு

மதுரை காமராஜர் சாலையில் உள்ள சௌராஷ்ட்ரா சங்கம் 2026-2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு


மதுரை அக் 08
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தொழில் வர்த்தக சங்கத்தில் சௌராஷ்ட்ரா சங்கம் 2026-2028‌ ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு நிகழ்வு நடைபெற்றது.

இதில் புதிய தலைவராக கேகே. குபேந்திரன் துணை தலைவர்களாக ஏ.பி. குமரேஷ்பாபு
கேகே. தினகரன் பொதுச் செயலாளராக
க.வி.வி. ராம்லட்சுமணன்ஜி பொருளாளராக டிஎன் சூரியபிரகாஷ் இணை செயலாளர்களாக ஆர்.கே. விக்னேஷ் பாபு டிஎம். ரூபேஷ்பாபு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன் பின்னர்
முன்னாள் நிர்வாகிகள் சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர் நிகழ்வில் வரும் காலகட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் சங்கத்தின் செயல்பாடுகளில் தீவிரமாக பங்கேற்கும் சூழலை உருவாக்க வேண்டும் சங்கத்தின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்தி எதிர்கால தலை முறைகளுக்கு பயன்படும் வகையில் வளர்க்க வேண்டும் சங்கத்திற்கான ஒரு சிறப்பான நளினமான சொந்த மாநாட்டு மையம் உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு இடங்களில் உள்ளதால் அவர்களை ஒரே வணிக வலையமைப்பில் இணைத்து வணிக தொடர்பை ஏற்படுத்த வேண்டும் பெண் தொழில் முனைவோரை ஊக்குவித்து வாய்ப்புகள் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதமான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

விழா நிறைவில் முன்னாள் தலைவர் கேகே. தினேஷ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் குபேந்திரனிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தார்.
இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- Advertisement -