Loading...

மதுரை மண்டலம் 4 ல் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடை பெற்றது

A

Admin

September 29, 2026 • 12:46 PM

மதுரை மண்டலம் 4 ல் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடை பெற்றது

மதுரை மண்டலம் 4 ல் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடை பெற்றது

மதுரை செப. 30

மதுரை மாநகராட்சி, மண்டலம் 4 தெற்கு அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் (பொ) நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி, மண்டலம் 4 தெற்கு அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி பெயர் மாற்றம் வேண்டி 16 மனுக்களும், காலிமனை வரிவிதிப்பு வேண்டி 1 மனுவும், புதிய சொத்துவரி வேண்டி 9 மனுக்களும், இதர மனுக்கள் 5, புதிய குடிநீர் குழாய் இணைப்பு 2 மனுக்களும், பாதாள சாக்கடை இணைப்பு 1 மனுவும், அடிப்படை வசதி வேண்டி 1 மனுவும், இதர மனுக்கள் 4, சுகாதாரம் தொடர்பான 2 மனுக்களும், இதர கோரிக்கை தொடர்பாக 1 மனுவும், என மொத்தம் 42 மனுக்களும் பெறப்பட்டது.

அதனை தொடர்ந்து, மேயர் (பொ) நாகராஜன் இன்றைய தினம் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் உடனடி தீர்வாக 3 பயனாளிகளுக்கு சொத்துவரி பெயர் மாற்றம் உத்தரவு ஆணைகளை வழங்கினார்.

இம்முகாமில் உதவி ஆணையாளர் .மணிமாறன், நிர்வாக அலுவலர் சிவக்குமார் உதவி வருவாய் அலுவலர் லோகநாதன் , உதவி செயற்பொறியாளர் இந்திராதேவி சுகாதார அலுவலர் வீரண், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) கோவிந்த பிரபாகர் அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -