Loading...

மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனயில் இமேஜிங் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இதய தமனி சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடிந்துள்ளனர்

A

Admin

September 29, 2026 • 08:02 AM

மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனயில் இமேஜிங் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி  இதய தமனி சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடிந்துள்ளனர்

மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனயில் இமேஜிங் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இதய தமனி சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடிந்துள்ளனர் 


மதுரை, செப் 30


தென்தமிழகத்தின் முதன்மை மருத்துவமனையான மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மதுரை அதிநவீன என்.ஐ.ஆர்.எஸ்., மற்றும் ஐ.உ.யூ.எஸ்., ஒருங்கிணைந்த இமேஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 100 இதய தமனி (கரோனரி) சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து, மேம்பட்ட இதய சிகிச்சையில் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. சிக்கலான இதய தமனி நோய்களைக் கண்டறிதல், அதன் தன்மையை ஆராய்தல் மற்றும் சிகிச்சை அளிப்பதில் உதவும் இமேஜிங் திறனை மேம்படுத்தும் இந்த அதிநவீன இரட்டை தொழில்நுட்பத்தை இப்பிராந்தியத்தில் முன்னோடியாக அறிமுகப்படுத்திய பெருமையை மீனாட்சி மருத்துவமணை பெறுகிறது.


புதிய என்.ஐ.ஆர்.எஸ்., மற்றும் ஐ.உ.யூ.எஸ்., தளமானது ஒன்றுக்கொன்று துணையாக உள்ள தகவல்களின் இரண்டு வடிவங்களை ஒரே இமேஜிங் அமைப்பில் ஒருங்கிணைத்து வழங்குகிறது. ரத்தக்குழாயின் உட்பகுதி அடைப்பின் அளவு, ரத்தக்குழாயின் பருமன் மற்றும் திசுக்களின் அமைப்பு பற்றிய விரிவான தகவல்களை ஐ.உ. யூ.எஸ்

வழங்குகிறது. அதே நேரத்தில், இதய தமனியில் படிந்துள்ள கொழுப்புப் படிமங்கள் பற்றிய தகவல்களை என்.ஐ.ஆர்.எஸ்.வழங்குகிறது. ஆஞ்சியோகிராபி ரத்தக்குழாயின் இரு பரிமாண வெளித்தோற்றத்தை மட்டுமே காட்டுவதாலும் கொழுப்பு படிமங்களின் கட்டமைப்பை துல்லியமாக அறிய இந்த நவீன தொழில்நுட்பம் மிகவும் அவசியமாகிறது.


ரத்தக்குழாய் மீதான இமேஜிங் திறனை தொடர்ந்து மேம்படுத்தி வரும் மீனாட்சி மருத்துவமணை இரத்த நாளத்தினுள் அதிநவீன இமேஜிங் செயல்பாட்டை அறிமுகம் செய்து, பயன்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்கிறது.


2006 முதல் ஐ.என்.யூ.எஸ். தொழில்நுட்பத்தையும், 2015-ல் ஓ.சி.டி.,தொழில்நுட்பத்தையும் இந்த மருத்துவமனை அறிமுகப்படுத்தியது. 2017-ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த ஓ.சி.டி., அமைப்பைப் பெற்றதன் மூலம், இந்தியா மற்றும் ஆசியா-பசிபிக் பிராந்தியத்திலேயே இந்த நவீன சாதனத்தை நிறுவிய முதல் மருத்துவ மையம் என்ற பெருமையை பெற்றது. இரத்தநாளத்திற்குள் இமேஜிங் செயல்முறையை இதுவரை 15,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு வெற்றிகரமாக செய்திருக்கும் இம்மையம், ஓ.சி.டி.செயல்முறைக்கான பயிற்சி மையமாகவும் திகழ்கிறது. 100 மருத்துவ செயல்முறைகளை வெற்றிகரமாக முடித்துள்ள மீனாட்சி மருத்துவமணை இத்தொழில்நுட்பத்தில் சிறப்பான மருத்துவ அனுபவத்தையும், திறனையும் பெற்றிருக்கிறது.


என்.ஐ.ஆர்.எஸ்.,தொழில்நுட்பம் ஏன் முக்கியமானது?


இதய தமனியில் உள்ள அடைப்பில் படிந்துள்ள கொழுப்பை அடையாளம் கண்டு அதன் அளவை துல்லியமாக கணக்கிடும் திறனே என்.ஐ.ஆர்.எஸ்.,தொழில்நுட்பத்தின் தனித்துவமாகும். வெறும் ஆஞ்சியோகிராபியால் மட்டும் அடைப்பின் தன்மையை அறிய முடியாது என்பதால், கொழுப்பு நிறைந்த அடைப்பை கண்டறிவது மருத்துவ ரீதியாக முக்கியமானது. என்.ஐ.ஆர்.எஸ்.,அமைப்பானது,

கொழுப்பின் அளவு குறித்த தெளிவான தகவல்களை உருவாக்குகிறது. இது, அடைப்பின் தன்மையை புரிந்துகொள்ள இதயநோய் நிபுணர்களுக்கு உதவுகிறது.


ஓ.சி.டி., இமேஜிங்கிற்கு தேவைப்படுவது போல கூடுதல் 'கான்ட்ராஸ்ட்' இல்லாமல் என்.ஐ.ஆர்.எஸ்..,- ஐ.வி.உ.எஸ்., இந்த தகவலை வழங்குகிறது என்பது முக்கியமானது. சிறுநீரகக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கோ அல்லது சிக்கலான சிகிச்சைகளின் போது மீண்டும் மீண்டும் இமேஜிங் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்போதோ, கான்ட்ராஸ்ட் மருந்தின் பயன்பாட்டைக் குறைக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.


மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இண்டர்வென்ஷனல் இதயவியல் சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் டாக்டர் செல்வமணி இது குறித்து கூறியதாவது: "ஒரு ரத்தக்குழாய் அடைப்பை ஆஞ்சியோகிராம் காட்டும் தோற்றத்திற்கும் அப்பால் சென்று பார்க்க மருத்துவருக்கு உதவுவதேஎன்.ஐ.ஆர்.எஸ்., ஐ.வி.உ.எஸ்.தொழில்நுட்பத்தின் சிறப்பாகும். ரத்தக்குழாய் மற்றும் அடைப்பின் அமைப்பு பற்றிய தகவல்களை வழங்குகிறது. என்.ஐ.ஆர்.எஸ்.,, அடைப்பில் உள்ள கொழுப்பின் அளவு பற்றிய தகவலை சேர்த்து தருகிறது. இந்த இரண்டு தகவல்களும் இணையும் போது நோயாளிகளின் இதய நோய் குறித்த முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கிறது."


சிக்கலான இதய தமனி சிகிச்சைகளில் இதன் பயன்பாடுகள்


இதய இரத்தக் குழாய்களில் உள்ள கால்சியம் படிந்த சிக்கலான அடைப்புகளில் ஸ்டென்ட் பொருத்துவதும் அதை விரிவாக்குவதும் மிகவும் சவாலானது. அத்தகைய சூழ்நிலைகளில் ஐ.வி.ஊ.எஸ்., பெரிதும் உதவியாக இருக்கும். ரத்தக்குழாயின் அளவு மற்றும் அடைப்பின் தன்மையைத் தீர்மானிக்கவும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும் இரத்த நாளத்திற்குள் படம் பிடிக்க இந்த உத்தி உதவுகிறது.


மாரடைப்புக்கான முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையின் போது, இந்தத் தொழில்நுட்பங்கள் கூடுதல் தகவல்களை வழங்கி சிகிச்சையின் முடிவை மதிப்பிட உதவுகின்றன. வழக்கமான ஆஞ்சியோகிராபி மூலம் பெற முடியாத. கொழுப்பு நிறைந்த அடைப்புகளைக் கண்டறியும் திறனை என்.ஐ.ஆர்.எஸ்., வழங்குகிறது.

 மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு அதிநவீன இதய சிகிச்சை தொழில்நுட்பங்களை வழங்குவதற்கான மருத்துவமனையின் தொடர் செயல்பாட்டின் ஒரு முக்கிய மைல்கல்லாகும்

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் இதயவியல் மருத்துவக் குழுவின், இன்டர்வென்சனல் இதயவியல் துறை இயக்குநர் டாக்டர் செல்வமணி; துறைத் தலைவர் டாக்டர் சிவக்குமார்; அகாடெமிக்ஸ் இயக்குநர் டாக்டர் சம்பத்குமார், கணேசன்; குழந்தைகளுக்கான இதயவியல் தலைவர் எலக்ட்ரோபிசியாலஜி தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் ஜெயபாண்டியன், இதய மயக்கமருந்தியல், தீவிர சிகிச்சை பிரிவின் தலைவர் டாக்டர் குமார்; மருத்துவ இயக்குநர் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி மற்றும் திலீப் பெர்னார்ட் ஆகியோர் பங்கேற்றனர்.

- Advertisement -