Loading...

மதுரை ரயில்வே தெற்கு மண்டலத்தில் தேசிய ஒற்றுமை தினம்

A

Admin

October 31, 2026 • 04:04 AM

மதுரை ரயில்வே தெற்கு மண்டலத்தில்  தேசிய ஒற்றுமை தினம்

மதுரை ரயில்வே தெற்கு மண்டலத்தில் தேசிய ஒற்றுமை தினம் உறுதிமொழி ஏற்பு மதுரை அக் 31 மதுரை ரயில்வே தெற்கு மண்டலத்தில் தேசிய ஒற்றுமை தினம் உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. விழாவில் சுதந்திரப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 அன்று தேசிய ஒற்றுமை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் ரயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் நடைபெற்றது. நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப் பாட்டையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய என்னை அர்ப்பணிக்கிறேன். இந்த உறுதிமொழியை மற்றவர்களுக்கு கொண்டு செல்ல கடும் முயற்சி செய்வேன். சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் தொலைநோக்கு பார்வையால் உருவான நமது நாட்டின் ஒருமைப்பாட்டு உணர்வை பாதுகாப்பேன். எனது சொந்த பங்களிப்பால் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வேன் என ரயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

- Advertisement -