Loading...

மதுரை வடமலையான் மருத்துவமனையில் அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை அறிமுகம்

A

Admin

October 08, 2026 • 05:39 PM

மதுரை வடமலையான் மருத்துவமனையில் அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை அறிமுகம்

மதுரை வடமலையான் மருத்துவமனையில் அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை அறிமுகம்

மதுரை அக் :8

தென் தமிழகத்தில் துல்லியமான மற்றும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளில் மற்றொரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் வகையில், மதுரை வடமலையான் மருத்துவமனை அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை முறையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பதிய தொழில்நுட்பம் மேம்பட்ட மற்றும் எளிய முறையில் உலகப் புகழ்பெற்ற ரோபோடிக் சிகிச்சையை மதுரை மற்றும் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு மிக அருகில் கொண்டுசேர்க்கிறது.
இதன் பிரம்மாண்டத் துவக்கவிழா வடமலையான் மருத்துவமனையில் நடைபெற்றது. விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் புகழகிரி வரவேற்றுப் பேசினார். அவர் பேசுகையில்,கடந்த 70 ஆண்டுகளாக மருத்துவத் துறையில் பல்வேறு புதுமைகளையும், உயர்தர சேவைகளையும் வழங்கிவரும் வடமலையான் மருத்துவமனை, தற்போது எஸ்.எஸ்.ஐ ., ரோபோடிக் அறுவைசிகிச்சை முறையை அறிமுகப்படுத்துகிறது. மேம்பட்ட, எளிய மற்றும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய இச்சிகிச்சை, மனிதநேயத்துடன் கூடிய நவீன மருத்துவத்தின் மிக முக்கிய மைல்கல்லாகும்" என்றார். விழாவைச் சிறப்பிக்கும் வகையில், மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநர் சந்திரா புகழகிரி குத்துவிளக்கேற்றித் துவக்கிவைத்தார். ஹைதராபாத் ப்ரீத்தி சிறுநீரக மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிறுநீரகவியல் துறைத் தலைவர்
வள்ளன் மோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இந்த அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை முறையைத் துவக்கிவைத்து அதன் சிறப்பம்சங்கள் மற்றும் மருத்துவ நன்மைகள் குறித்து விளக்கவுரையாற்றினார், அதை தொடர்ந்து, எஸ்.எஸ்.
இன்னோவேஷன்ஸ் துணைத் தலைவர் சீனிவாசரெட்டி வாழ்த்திப் பேசினார். இறுதியாக, மருத்துவ சேவைகள் இயக்குநர் டாக்டர் சுந்தரராஜன் நன்றி கூறினார். நிகழ்வில் இதயம் மற்றும் நெஞ்சக அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் . பாபு, மருத்துவ இயக்குநர் டாக்டர் பாப்புதாதன், புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். அழகுகணேஷ், இரைப்பை மற்றும் குடல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேஷ், சிறுநீரக மருத்துவர்கள் டாக்டர் சதீஷ் கின்னி, டாக்டர் விவேக், மகப்பேறு மருத்துவர்கள் டாக்டர். பாலசரஸ்வதி, டாக்டர் பாரதி, டாக்டர் . கார்த்திகா மற்றும் பொது அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் அழகுமுத்து மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
நவீன மருத்துவ உலகின் உச்சகட்ட தொழில்நுட்பமான இந்த ரோபோடிக்
அறுவைசிகிச்சையில், அறுவைசிகிச்சை செய்யப்படும் பகுதியை முப்பரிமாணத்தில் பெரிதாக்கித் துல்லியமாகப் பார்க்கும் வசதி, மிகச்சிறிய துளைகள் வழியே செய்யப்படுவதால் ரத்த இழப்பு கணிசமாகக் குறைவது மற்றும் குறைந்த வலியுடன் நோயாளி மிக விரைவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது போன்ற பல்வேறு இணையற்ற நன்மைகளைக் கொண்டுள்ளது.
இந்த எஸ்.எஸ்.ஐ ., ரோபோடிக் அறுவைசிகிச்சை முறை இதயம் மற்றும் நெஞ்சகப் பிரிவு (கார்டியோதோராசிக்), சிறுநீரகவியல், மகப்பேறு மருத்துவம், இரைப்பை குடல் அறுவைசிகிச்சை, புற்றுநோயியல் மற்றும் பொது அறுவைசிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் இனி வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த அதிநவீன வசதியின் மூலம், தென்தமிழக மக்கள் இனி வெளிமாநிலங்கள் அல்லது வெளிநாடுகளுக்குச் செல்லாமலேயே உலகத்தரம் வாய்ந்த ரோபோடிக் சிகிச்சையை மதுரையிலேயே பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -