மதுரை விரகனூரில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்
மதுரை விரகனூரில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் மதுரை நவ 03 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விரகனூர் ஊராட்சியில் தமிழ்நாடு உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின் பேரில் திட்ட இயக்குனர் மற்றும் கிராம ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஆலோசனையின் படி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பா.சந்திரன் மற்றும் முன்னாள் துணைத் தலைவர்கள் கணேசன், கல்யாணி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஓம்கார் உட்பட உள்ளாட்சி முன்னாள் பிரதிநிதிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சு.ராஜாமணி அனைவரையும் வரவேற்பு செய்து ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து எடுத்துரைத்தார் அதன் தொடர்ச்சியாக ஊராட்சியில் தினசரி சேரும் குப்பை கழிவுகளை மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளை கல்பகுதியில் சேர்ப்பதற்கு தீர்மானம் அனைவரது ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.