Loading...

மதுரையில் காவலர் வீர வணக்க மாரத்தான் போட்டி

A

Admin

October 18, 2026 • 02:08 PM

மதுரையில் காவலர் வீர வணக்க மாரத்தான் போட்டி

மதுரையில் காவலர் வீர வணக்க மாரத்தான் போட்டி!

மதுரை, அக்டோபர் ;19

காவல் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கிலும், மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் “நம்ம மதுரை நம்ம போலீஸ்” இயக்கத்தின் கீழ் 5 கி.மீ. தூரத்திற்கான காவலர் வீர வணக்க நினைவு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கிய போட்டியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, தாமும் பங்கேற்றார். ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கி ஐயர் பங்களா வழியாக மீண்டும் மைதானத்தை வந்தடையும் வகையில் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டிருந்தது.
இப்போட்டியில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் என 600-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பங்கேற்பாளர்களுக்கு வழிநெடுகிலும் இசை நிகழ்ச்சிகள் மூலம் உற்சாகம் அளிக்கப்பட்டதுடன், தண்ணீர், பழச்சாலட் மற்றும் குளுக்கோஸ் பானம் வழங்கப்பட்டன.
போட்டியின் முடிவில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியோர் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்குக் கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார். பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும், நம்ம மதுரை நம்ம போலீஸ் திட்டத்தின் கீழ், பொதுமக்களும் காவல்துறையினரும் இணைந்து பங்கேற்கும் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

- Advertisement -