மதுரையில் ‘சிங்கப்பெண்’ விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு!
மதுரையில் ‘சிங்கப்பெண்’ விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு! மதுரை மாநகர காவல்துறை சார்பில், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் ‘சிங்கப்பெண்’ விழிப்புணர்வு குறும்படம் வெளியீட்டு நிகழ்ச்சி, மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, பாதிக்கப்பட்டவர்களைச் சிங்கப்பெண் அதிரடிப் படையினர் விரைந்து சென்று மீட்டு பாதுகாப்பாக ஒப்படைப்பது, போதைப்பொருட்களின் தீமைகள் மற்றும் அவற்றின் நடமாட்டத்தை ஒழிப்பது குறித்து இக்குறும்படம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.