மத்தூரில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள்
மத்தூரில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள்
மத்தூர் அக் :4
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் சார்பில் 157-வது காந்தி ஜெயந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் 51-வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவர் ஹாஜி ஜாபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மத்தூர் வட்டாரத் தலைவர் தனஜெயம் முன்னிலையில் மத்தூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினார்கள் தொடர்ந்து, தேசத்தந்தை மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்
இந்நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் சசிகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் வினோத்குமார், சந்திரன், ராமசாமி, அம்ஜா, கலீல்பாய், முகமதுஷபி, திப்பு சுல்தான், செல்வராஜ், அஜ்முதீன், வேடியப்பன், கணேசன், பிரசாந்த், பாரூக், பெருமாள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் இளைஞர் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஜமால், நன்றி உரையாற்றினார்.