மருத்துவமனைகளின் வரலாற்றுச் சாதனை: 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகள் நிறைவு
மருத்துவமனைகளின் வரலாற்றுச் சாதனை: 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகள் நிறைவு
மதுரை, அக் 22
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகளைச் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளன. மிகத் துல்லியமான மருத்துவச் சேவைக்காக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இது ஒரு மாபெரும் முன்னேற்றமாகும்.
தென் தமிழகத்தில் ரோபோ உதவியுடன் செய்யப்படும் பல அறுவைசிகிச்சை முறைகளை முதன்முதலில் இம்மருத்துவமனைகள் அறிமுகப்படுத்தியுள்ளன. கணையம், உணவுக்குழாய், கல்லீரல், இரைப்பை மற்றும் பெருங்குடல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் சிக்கலான பிரச்னைகளுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை இப்பகுதியில் முதல்முறையாகப் பயன்படுத்திய பெருமை இம்மருத்துவமனையையே சாரும். கடந்த பத்து வருடங்களாக, நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி, தங்களின் அறுவைசிகிச்சைத் திறனை இவர்கள் மேம்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவருமான டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி பேசுகையில்: "ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் 500 என்ற மைல்கல்லை எட்டியிருப்பது, மருத்துவ நிபுணத்துவம்,
தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சி ஆகியவற்றில் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இத்தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சைகளையும் எங்களால் மிகத்துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் செய்ய முடிகிறது. என்று தெரிவித்தார்.
டாக்டர் மோகன் கூறுகையில்: "ரோபோட்டிக் அறுவைசிகிச்சையானது, அதிக துல்லியம், மேம்பட்ட கருவி கட்டுப்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட முப்பரிமாணக் காட்சிப்படுத்தல் ஆகியவற்றை வழங்கும் வகையில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. சிக்கலான அறுவைசிகிச்சைகளைக் கூட மருத்துவர்களால் எளிதாகச் செய்ய முடிகிறது. இதன்படி, மருத்துவர்கள் வேறு இடத்தில் இருந்தபடியே இணையத்தின் மூலம் நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய முடியும்.
இந்த மைல்கல்லைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடைமுறைகள் குறித்து தங்களது அனுபவங்களை முதுநிலை மருத்துவர்கள் பகிர்ந்துகொண்டனர். டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி மற்றும் டாக்டர் மோகன் ஆகியோருடன், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவர்கள், டாக்டர் பிரதீப் மற்றும் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ், சிறுநீரகவியல் துறையில் முதுநிலை நிபுணர் டாக்டர் பால் வின்சென்ட், புற்றுநோய் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவர் டாக்டர் விஜய பாஸ்கர், மகளிர் நோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் பத்மா ஆகியோரும் கலந்துகொண்டு செய்தியாளர்களுடன் உரையாடினர்.
இச்சந்திப்பில் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் திலீப் கலந்துகொண்டார்