மாநகராட்சி கமிஷனர் மண.டலம் 5ல் ஆய்வு மதுரை அக் 31 மதுரை மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு-92, வெள்ளக்கல் நுண் உரம் செயலாக்க மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் .
மாநகராட்சி கமிஷனர் மண.டலம் 5ல் ஆய்வு மதுரை அக் 31 மதுரை மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு-92, வெள்ளக்கல் நுண் உரம் செயலாக்க மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் .கௌரவ் குமார், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வெள்ளக்கல் நுண் உரம் செயலாக்க மையத்திற்கு வார்டு எண். 92 மற்றும் வார்டு எண். 100 ஆகிய பகுதிகளில் இருந்து பெறப்படும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து நுண் உரம் செயலாக்க மையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. நுண் உர செயலாக்க மையத்தின் செயல்பாடு குறித்து பார்வையிட்டதுடன், இந்த மையத்திற்கு தினந்தோறும் கொண்டு வரப்படும் பழக்கழிவுகள் தொடர்பாக அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.