Loading...

மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்! ​மாரண்டஅள்ளி:

A

Admin

October 30, 2026 • 07:45 AM

மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்!   ​மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்! ​மாரண்டஅள்ளி: அக் 31 ​தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு கூட்டம் பாலக்கோடு வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடைபெற்றது. ​இந்நிகழ்ச்சிக்கு பாலக்கோடு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டப் பணிகள் குழுவின் தன்னார்வலர்கள் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு உரையில் ​பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் சமுதாயத்தில் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக சட்டப்படி குரல் கொடுக்கவும் தேவையான அடிப்படை உரிமைகள் குறித்து விளக்கப்பட்டது. ​போக்சோ சட்டம் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் அரசு அறிமுகப்படுத்தியுள்ள போக்சோ சட்டத்தின் முக்கிய சரத்துகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. ​அவசர உதவி எண்கள்: அவசர காலத்தில் மாணவிகள் காவல்துறையை அணுக 1098 குழந்தைகள் உதவி எண் மற்றும் 181 பெண்கள் உதவி எண் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

- Advertisement -