Loading...

மாரநாடு கருப்பணசாமி கோவிலில் நடிகர் தனுஷ் நடிக்கும் பட பூஜை. காணிக்கையாக 18 அறிவாள் வழங்கினார். கோவில் வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு, பரபரப்பு

A

Admin

September 25, 2026 • 12:36 PM

மாரநாடு கருப்பணசாமி கோவிலில் நடிகர் தனுஷ் நடிக்கும் பட பூஜை.  காணிக்கையாக 18 அறிவாள் வழங்கினார். கோவில் வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு, பரபரப்பு

*மாரநாடு கருப்பணசாமி கோவிலில் நடிகர் தனுஷ் நடிக்கும் பட பூஜை. காணிக்கையாக 18 அறிவாள் வழங்கினார். கோவில் வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு, பரபரப்பு.*

திருப்புவனம் செப் 26
சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகேயுள்ள புகழ்பெற்ற மாரநாடு கருப்பணசாமி திருக்கோயிலுக்கு திரைப்பட நடிகர் தனுஷ் வருகை தந்து தரும் நடிகர் தனுஷ், சிறப்பு வழிபாடுகள் செய்து சுவாமி தரிசனம் செய்யதார்.

நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக, மாரநாடு கருப்பணசாமிக்கு 20 அடி உயரமுள்ள பிரம்மாண்ட அருவாளை காணிக்கையாக வழங்கினார். மேலும், இந்த ஆன்மீக நிகழ்வையொட்டி 20 கிடாக்கள் வெட்டப்பட்டு, கோயிலுக்கு வரும் சுமார் 1,000 பக்தர்களுக்குப் பிரம்மாண்ட அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில்
திரைப்பட நடிகர் தனுஷின் 56 வது திரைப்படத்தின் பூஜையும் நடைபெற்றது. அப்போது நடிகர் SJ சூரியா, வைகைபுயல் வடிவேலு உள்ளிட்ட நடிகர் நடிகைகள் வருகை தந்தனர்.

அப்போது கோயில் வளாகத்தில் அனுமதியின்றி திரைப்பட கேமராக்களை கொண்டு படப்பிடிப்பு எடுக்க முயன்றயை கண்டித்து கோயில் நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் தனுசை காண மாரநாடு கருப்பணசாமி கோயில் பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இதனை முன்னிட்டு
படக்குழுவினர் சார்பில் கிராம மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு 20 கிடா வெட்டி தடபுடலாக அன்னதான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
குறிப்பிடத்தக்கது.

- Advertisement -