மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு மதுரை செப் 18 மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. த.வெ.க., அரசு பொறுப்பேற்று மூன்று மாதத்திற்குள் குடமுழுக்கு பணிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்து வீரவசந்தராயர் மண்டபத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டு ருந்தார் அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம், துறை சார்ந்த அலுவலர்களுடன் தொடர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தினர் . குறிப்பாக வீரவசந்தராயர் மண்டப பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில் திருக்குடமுழுக்கு நடைபெறுவதற்கு முன் பணிகள் நிறைவுப்பெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவுரையின்படி, இத்திருக்கோயிலில் உள்ள அனைத்து கோபுரங்கள் மற்றும் மண்டபங்களுக்கு மராமத்துப் பணிகள் மேற்கொண்டு, வர்ணம் பூசுதல் உள்ளிட்ட அனைத்துத் திருப்பணிகளும் தொல்லியல் துறை வல்லுநர்களின் கருத்துரு, மதுரை மண்டல வல்லுநர் குழு, மாநில அளவிலான வல்லுநர் குழுவினரிடம் ஒப்புதல் பெறப்பட்டு திருக்கோயில் நிதி மூலம் 86 திருப்பணிகள் ரூ.15.40 கோடி மதிப்பீட்டிலும், உபயதாரர் நிதி மூலம் 100 திருப்பணிகள் ரூ.16.89 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.32.29 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் எவ்வித சிரமம் மற்றும் கால தாமதமின்றி குடமுழுக்கை காண சீரான வரிசைமுறை ஏற்பாடு செய்யப்பட்டது. 24 ஓதுவார்களை நியமனம் செய்து திருவாசகம் மற்றும் திருமுறை பாராயணம் அனைத்து கோபுர கலசங்களிலும் தமிழில் குடமுழுக்கின்போது பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 264 மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் திருக்குடமுழுக்கின் போது பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்ல கட்டணமில்லா பேருந்துகளை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் போக்குவரத்து துறைக்கு ஏற்பாடு செய்து தரப்பட்டது. மேலும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவினை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து செயல்படக் கூடிய வகையில் கட்டுப்பாட்டு அறை இத்திருக்கோயிலின் கிழக்கு இராஜகோபுரத்தின் எதிர்புறம் அமைந்துள்ள புதுமண்டபத்தில் செயல்பட்டது. இந்த கட்டுப்பாட்டு அறையில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடமுழுக்கு விழா எவ்வித தொய்வின்றி நடைபெற்றது. பக்தர்களுக்கு நுழைவு வாயிலில் தண்ணீர், பிஸ்கெட்டுடன் கூடிய பிரசாதப்பை வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளில் பெருளமளவில் காவல்துறையினர் ஈடுபட்டு எவ்வித அசம்பாவிதமும், போக்குவரத்து நெரிசலுமின்றி பக்தர்களுக்கு வழிவகை செய்யப்பட்டது. மேலும், திருக்குடமுழுக்கினைக் காண வந்த பக்தர்களுக்கு அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கொண்ட மருத்துவ உதவி மையங்கள் மற்றும் முகாம்கள் திருக்கோயில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள வீதிகளில் தயார் நிலையில் அமைக்கப்பட்டன. அவசர மருத்துவ உதவிக்காக பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி எண்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மின் வழித்தடங்கள் மற்றும் மின்மாற்றிகளை சுற்றிலும் போதிய பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 55 வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டன. பக்தர்ளுக்கு 108 அவசர ஊர்திகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன இந்த சிறப்பான ஏற்பாடுகளினால் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க விமானங்கள் மற்றும் இராஜகோபுரங்களுக்கு சமகாலக் குடமுழுக்கும், மூலவர் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சுவாமிக்கும் கலசாபிஷேகமும் பொதுமக்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. இத்திருக்குடமுழுக்கு பெருவிழாவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றும் எவ்வித சிரமமும், தடங்கலும், அசம்பாவிதமும் இன்றி சிறப்பாக நடைபெற்றது என பக்தர்கள் முதல்வர் , அமைச்சர் பெருமக்களுக்கும், இந்து அறநிலையத்துறைக்கும், மாவட்ட நிர்வாத்திற்கும், பக்தர்கள் நன்றி தெரிவித்தனர். இவ்விழாவிற்கு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்.நிர்மல் குமார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் .சம்பத்குமார், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் ராஜீவ், நாடாளுமன்ற உறுப்பினர் .வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் மதார் பதூருதின், .கல்லாணை, தங்கப்பாண்டி, கார்த்திகேயன், கருப்பையா, கோபிசன், மாண்பமை நீதியரசர்கள், அரசு செயலாளர் .ராஜாராமன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டாக்டர் வினய், மாவட்ட ஆட்சித் தலைவர். நிஷாந்த் கிருஷ்ணா, பொறுப்பு அலுவலர்கள் வீரராகவ ராவ்,.மதுசூதன் ரெட்டி, கௌரவ் குமார்,திருக்கோயில் அறங்காவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.