மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணர்வு தினம் அனுசரிப்பு மதுரை, நவ 13 மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.பக்கவாதம் வராமல் தடுப்பது, அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணர்வு தினம் அனுசரிப்பு மதுரை, நவ 13 மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.பக்கவாதம் வராமல் தடுப்பது, அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே அடையாளம் காண்பது, சரியான நேரத்திற்குள் சிறப்பு சிகிச்சையை பெறுவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே இந்நிகழ்வின் நோக்கமாகும். ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் - விரைந்து செயல்படுங்கள் "என்ற விழிப்புணர்வுச் செய்தியின் மூலம், பக்கவாத எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காணும் திறனை மக்களுக்கு வழங்குவது இந்நிகழ்வின் இலக்காகும். பக்கவாதம் வராமல் தடுப்பது மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் குறிக்கோளோடு ஆண்டுதோறும் அக்டோபர் 29-ஆம் தேதி 'உலக பக்கவாத தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.உலக பக்கவாத அமைப்பின் 2025-ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.2 கோடி பேருக்குப் புதிதாகப் பக்கவாத பாதிப்புகள் ஏற்படுகின்றன; அதாவது ஒவ்வொரு மூன்று வினாடிக்கும் ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார். இந்தியாவில், பக்கவாதம் தொடர்ந்து உயிரிழப்புக்கும் உடல் இயக்கத்திறன் குறைபாட்டிற்கும் முக்கியக் காரணமாக இருந்து வருகிறது. டாக்டர் நரேந்திர நாத் ஜேனா, இயக்குனர் மற்றும் தலைவர், அவசர மருத்துவ சிகிச்சை பிரிவு, டாக்டர் நரேந்திரன், நரம்பியல் நிபுணர், நரம்பியல் துறை, டாக்டர் விஜய் ஆனந்த், முதுநிலை நரம்பியல் நிபுணர் மற்றும் துறைத் தலைவர், நரம்பியல் துறை, டாக்டர் செல்வமுத்துக்குமரன், முதுநிலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் தலைவர். நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, டாக்டர் முகுந்தராஜன், முதுநிலை நிபுணர் மற்றும் தலைவர், இமேஜிங் அறிவியல் மற்றும் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி துறை, டாக்டர் செந்தில்குமார். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, டாக்டர் கவீஸ், இணை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, திலீப் பெர்னார்ட், இயக்குனர், மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியோர் இந்த விழிப்புணர்வு தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்று தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். மூளைக்கு இரத்தஓட்டத் தடையால் ஏற்படும் பக்கவாதத்திற்குத் தகுதியின் அடிப்படையில் 'நரம்பு வழி த்ரோம்போலிசிஸ்' சிகிச்சை வழங்கப்படுகிறது. மூளையின் பெரிய ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளுக்கு 'மெக்கானிக்கல் த்ரோம்பெக்டமி' சிகிச்சையும், மூளையில் ரத்தக்கசிவால் ஏற்படும் பக்கவாதம் தொடர்பான தீவிர சிக்கல்களுக்கு நரம்பியல் அறுவைசிகிச்சை போன்ற நவீன சிகிச்சைகளையும் இம்மருத்துவமனை வழங்கி வருகிறது. பக்கவாதத்தை முன்கூட்டியே கண்டறிவதற்கான வழிகள் குறித்துப் பேசிய நிபுணர்கள், பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டிய எளிய நெறிமுறையைப் பரிந்துரைத்தனர்: திடீரென உடல் சமநிலையை இழப்பது அல்லது தடுமாறுவது. திடீரெனப் பார்வை மங்கலாவது அல்லது பார்வை இழப்பு.சிரிக்கும்போது முகத்தின் ஒரு பக்கம் கோணுவது அல்லது தொங்குவது. திடீரென கைகளில் ஏற்படும் பலவீனம் அல்லது கையைத் தூக்க முடியாமல் கீழ்நோக்கிச் சரிவது. குழறலான பேச்சு, பேசுவதில் அல்லது பிறர் பேசுவதைப் புரிந்துகொள்வதில் மேற்கண்ட அறிகுறிகளுள் ஏதாவது தென்படுமானால், நேரத்தை வீணாக்காமல் உடனடியாக அவசர சேவைகளை அழைக்கவும்; மருத்துவமனைக்கு விரைவாகச் செல்லவும். நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைகள் மூலமாகவே 'ஸ்ட்ரோக் த்ரோம்போலிசிஸ்' சிகிச்சையை வழங்கும் எதிர்காலத் தொழில்நுட்ப முன்னேற்றங்களைச் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.