Loading...

முதுகுளத்தூரில் 41 மாத நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி சாலைபணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

A

Admin

October 17, 2026 • 03:26 AM

முதுகுளத்தூரில் 41 மாத நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி சாலைபணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூரில் 41 மாத நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி சாலைபணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

                                  

முதுகுளத்தூர் . . ராமநாதபுரம் மாவட்டம்


முதுகுளத்தூரில் 41 மாத நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு சாலைப் பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சாலைப் பணியாளர்கள் சங்க வட்டக்கிளைத் தலைவர் பூவலிங்கம் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முகமது நஜிமதீன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி 41 மாத நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

முன்னாள் வட்டக்கிளைத் தலைவர் முனீஸ்வரன் நன்றி கூறினார்.

- Advertisement -