Loading...

முதுகுளத்தூரில் அனைத்து மகளிா் காவல் நிலையத்தை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் திறந்து வைத்தாா்

A

Admin

November 06, 2026 • 03:51 PM

முதுகுளத்தூரில் அனைத்து மகளிா் காவல் நிலையத்தை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் திறந்து வைத்தாா்

முதுகுளத்தூரில் அனைத்து மகளிா் காவல் நிலையத்தை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் திறந்து வைத்தாா்.

ராமநாதபுரம் 

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் ரூ 1.28 கோடியில் புதிய மகளிா் காவல் நிலையம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை தமிழ்நாடு முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, முதுகுளத்தூரில் நடைபெற்ற விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா். இதுவரை வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்த மகளிா் காவல் நிலையம் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.

முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம், காவல் ஆய்வாளா்கள் முகமது இா்சாத், ஜக்குபாய், வா்த்தக சங்க மாநில

 துணைத் தலைவா் கருப்பசாமி, முதுகுளத்தூா் வா்த்தக சங்கத் தலைவா் பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

- Advertisement -