ராமநாதபுரத்தில் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஆதினி கிளினிக் சார்பில் இலவச கண் மற்றும் பொது சிகிச்சை பரிசோதனை முகாம்
ராமநாதபுரத்தில் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஆதினி கிளினிக் சார்பில்
இலவச கண் மற்றும் பொது சிகிச்சை பரிசோதனை முகாம்
ஸ்ரீ வேதா அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற்றது
ராமநாதபுரம், அக்.5-
ராமநாதபுரத்தில் ஸ்ரீ வேதா அறக்கட்டளை ராமநாதபுரம் கோல்ட் லைன் சங்கம் ஆதினி மருத்துவமனை ராமநாதபுரம் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் பொது சிகிச்சை முகாம் நடத்தினர்.
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ சிகிச்சை முகாமில் கண்புரை நோய் பரிசோதனை கிட்ட பார்வை தூரப் பார்வை கண்ணில் இருந்து நீர் அழுத்தம் கண்ணில் சதை வளர்தல் விழித்திரை நோய் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் உயர் அழுத்த பரிசோதனை போன்ற பல்வேறு பரிசோதனைகள் பொதுமக்களுக்கு இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. வேதா அறக்கட்டளை சார்பாக நிறுவனர் வீர மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் லயன்ஸ் கிளப் சார்பாக மோகன் மற்றும் நிர்வாகிகள் ஆதினி கிளினிக் டாக்டர் ஆனந்தகுமார் மற்றும் தீபிகா ஆகியோர் முகாமை முன்னிலை வகித்து நடத்தினர். இந்த இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாமில் 150 புற நோயாளிகள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். இதில் 50 பேர் மேல் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.