Loading...

ராமநாதபுரத்தில் வாலியா ஸ்கொயர் மேக்ஸ் ஸ்டோர் திறப்பு விழா கோலாகலம்

A

Admin

October 18, 2026 • 02:02 PM

ராமநாதபுரத்தில் வாலியா ஸ்கொயர் மேக்ஸ் ஸ்டோர் திறப்பு விழா கோலாகலம்


மூத்த வழக்கறிஞர்கள் ரவிசந்திரராமவன்னி மற்றும் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது!


ராமநாதபுரம், அக்.18-

ராமநாதபுரத்தில் பிரபல வாலியா வணிகக் குழுமத்தின் சார்பில் 76-வது புதிய கிளை 

வாலியா ஸ்கொயர் மேக்ஸ் ஸ்டோர் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. 

ராமநாதபுரம் டி ப்ளாக் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே புதிதாக திறக்கப்பட்ட வாலியா ஸ்கொயர் மேக்ஸ் ஸ்டோர் திறப்பு விழாவில்

  மூத்த வழக்கறிஞர் ரவிச்சந்திர ராமவன்னி தலைமையில், மூத்த வழக்கறிஞர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.

 சி.ஆர்.எம்.டி.ஏ மூத்த அதிகாரி ஜே. கிருஷ்ணமூர்த்தி புதிய நிறுவனத்தை திறந்து வைத்தார்.

ரோட்டரி முன்னாள் ஆளுநர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், ஆடிட்டர் சுந்தர்ராஜன், டி சினிமா அதிபர் தினேஷ் பாபு, மற்றும் தியாகி பி.ஆர்.என் நவசக்தியின் புதல்விகள் உள்ளிட்ட பலரும் குத்துவிளக்கேற்றினர்.

ரோட்டரி முன்னாள் ஆளுநர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா மற்றும் வழக்கறிஞர் ரவிச்சந்திர ராமவன்னி ஆகியோர் முதல் விற்பனையைத் தொடங்கி வைக்க, வழக்கறிஞர் சுந்தர் கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

 திறப்பு விழாவில் ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், நகராட்சி சேர்மன் கார்மேகம், துணை சேர்மன் பிரவீன், அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, ஐஸ்வர்யா குழும சேர்மன் வெங்கடசுப்பு, ஆசியன் முஜீபுர் ரஹ்மமான், வழக்குரைஞர் முனியசாமி, இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் வேலுசாமி, துல்கிப், காருகுடி சேகர் 

மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வழக்கறிஞர்கள், டாக்டர்கள், இன்ஜினியர்கள், வணிக பெருமக்கள், ரோட்டரி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், தொழிலதிபர்கள், அரசு துறை அதிகாரிகள் அலுவலர்கள் காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் திரளாக கலந்துகொண்டு வாழ்த்தினர். விழா நிகழ்வுகளை ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் சண்முகராஜேஸ்வரன் தொகுத்து வழங்க, வாலியா குழும சேர்மன் பிஆர்என். ராஜாராம் பாண்டியன் (எ) கோபால், பிஆர்என்.திருமூலர், பிஆர் என் போஸ் மற்றும் குடும்பத்தினர்

வரவேற்று உபசரித்தனர்.

மேலாளர் 

இம்தியாஸ் உள்ளிட்ட வாலியா நிறுவனம் அலுவலர்கள் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

- Advertisement -