ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுகடைகள் 3 நாட்கள் மூடல் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழா 30 ந்தேதி நடைபெறஉள்ளது இதனை முன்னிட்டு
ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுகடைகள் 3 நாட்கள் மூடல் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழா 30 ந்தேதி நடைபெறஉள்ளது இதனை முன்னிட்டு பொதுஅமைதி மற்றும் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கும் பொருட்டு அக்டோபர் 28 29 30 ஆகிய மூன்று தினங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனைகடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள்எப்.எல்.2 எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவற்றில் மதுபானங்களை விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யும் பொருட்டு அக்.28 29 30 ஆகிய மூன்று தினங்கள் முழுமையாக மூடிவைத்திட ஆணையிடப்படுகிறது மேற்கண்ட நாட்களில் விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சிதலைவர் மா.சிவகுரு பிரபாகரன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்