Loading...

ரூ.90 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 நவீன அங்கன்வாடி மையங்கள் திறப்பு

A

Admin

September 21, 2026 • 03:40 PM

ரூ.90 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 நவீன அங்கன்வாடி மையங்கள் திறப்பு

ரூ.90 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 நவீன அங்கன்வாடி மையங்கள் திறப்பு

மதுரை செப் :22

மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சிப் பகுதிகளில், குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சி, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு மற்றும் முன்பருவக் கல்வியை மேம்படுத்தும் வகையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக, மாநில நிதிக்குழு மானியம் (இயக்குதல் மற்றும் பராமரிப்பு, உள்கட்டமைப்பு) 2025-26 திட்டத்தின் கீழ் தலா ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.90 இலட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 5 அங்கன்வாடி மையக் கட்டடங்களை உயர்கல்வித்துறை அமைச்சர்விஸ்வநாதன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, தலைமை வகித்தார்.
ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான மிக முக்கியமான காலகட்டம் ஆரம்பகாலக் குழந்தைப் பருவமே ஆகும். அந்த வகையில், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்குத் தேவையான சத்தான ஊட்டச்சத்து உணவுகளை உறுதி செய்வதிலும், இணை உணவு வழங்குவதிலும் அங்கன்வாடி மையங்கள் முதன்மைப் பங்காற்றுகின்றன.

கட்டமைக்கப்பட்ட பகுதிகள்:

மேலூர் நகராட்சிக்குட்பட்ட கீழ்க்கண்ட 5 பகுதிகளில் இப்புதிய அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன:
வார்டு எண் 4 - வெள்ளநாதன்பட்டி
வார்டு எண் 23 - தினசரி சந்தை சாலை
வார்டு எண் 6 - அண்ணா காலனி
வார்டு எண் 21 - மலம்பட்டி
வார்டு எண் 27 - கலைஞர் நகர்
குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் மகிழ்ச்சியோடு விளையாடவும் பயிலவும் ஏதுவாக நல்ல காற்றோட்டம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பிரத்யேகக் கழிப்பறை வசதிகள் மற்றும் சமையலறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடனும் இக்கட்டடங்கள் தலா ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளன.
இப்புதிய கட்டடங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் குத்துவிளக்கேற்றி மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ,மேலூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதாமேலூர் வட்டாட்சியர் வசந்த் மேலூர் நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் , ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி வளர்ச்சிப் பணிகள் திட்ட இயக்குநர் பூங்கொடி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

- Advertisement -