லெட்சுமிபுரம் ஊராட்சியில் மாபெரும் தூய்மைப் பணிகள்:
லெட்சுமிபுரம் ஊராட்சியில் மாபெரும் தூய்மைப் பணிகள்: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு! செப் 01 தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், லெட்சுமிபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் மாபெரும் தூய்மைப் பணிகளை (Mass Cleaning) மாவட்ட ஆட்சித்தலைவர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு சுகாதாரமான வாழ்விடத்தை உறுதி செய்யும் வகையிலும், மாவட்டம் முழுவதும் மாபெரும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் இன்று (31.10.2026) மற்றும் நாளை (01.11.2026) சாலையோரங்கள், தெருக்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொது இடங்களில் தேங்கியுள்ள குப்பைகளைத் தூய்மைப் பணியாளர்கள் மூலம் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், லெட்சுமிபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் குப்பைகள் சேகரிக்கும் பணிகளைப் பார்வையிட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தூய்மைப் பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார். மேலும், அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குப்பைகளைச் சேகரித்து அகற்றுமாறும், தற்பொழுது மழைக்காலம் என்பதால் குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்குவதால் ஏற்படக்கூடிய சுகாதாரச் சீர்கேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு கால்வாய்கள் மற்றும் பொது இடங்களைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் எனவும், பொதுமக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக, லெட்சுமிபுரம் ஊராட்சியில் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நடவு செய்தார்கள். இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி) துஷார் ஸ்ரீஹர் ஷிண்டே மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், புவனேஷ்வரி,ஊராட்சி செயலர்கள் பாண்டியராஜன், லெனின், உள்ளிட்ட பல அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.