Loading...

வருசநாடு கிராம மக்களை வெளியேற்றும் வனத்துறை

A

Admin

September 30, 2026 • 03:39 AM

வருசநாடு கிராம மக்களை வெளியேற்றும் வனத்துறை

வருசநாடு கிராம மக்களை வெளியேற்றும் வனத்துறை நடவடிக்கையைக் கண்டித்து கடமலைக்குண்டுவில் 4-வது நாளாகப் பெருந்திரள் காத்திருப்புப் போராட்டம்!


செப் 30



தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, கோம்பைத்தொழு, தும்மக்குண்டு, வாலிப்பாறை, மூலக்கடை, குமணந்தொழு, சிங்கராஜபுரம், தங்கம்மாள்புரம், முத்தாலம்பாறை, தர்மராஜபுரம், நரியூத்து, காமராஜபுரம் மற்றும் முருகக்கோட்டை உள்ளிட்ட சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வனத்துறையின் வெளியேற்ற நடவடிக்கையைக் கண்டித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடமலைக்குண்டு புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்று வரும் இக்காத்திருப்புப் போராட்டம் இன்று 4-வது நாளை எட்டியுள்ளது. பொதுமக்கள் அங்கேயே சமையல் செய்து, இரவு நேரங்களிலும் தங்கித் தங்களது கண்டனத்தைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

 உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு வனத்துறை நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

அடிப்படை வசதிகள் மலைக் கிராமங்களில் வனத்துறையின் கெடுபிடிகளைத் தடுத்து, மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தர வேண்டும்.

 நில உரிமை பட்டா வன உரிமைச் சட்டம் 2006-ன் படி, பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்களுக்கு உரிய பட்டா வழங்கிட அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஆதரவு

இப்போராட்டத்திற்குத் தேனி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் திரு. முருகக்கோட்டை ராமர், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. திருமாறன் ஜி, அனைத்துக் கட்சி அரசியல் பிரமுகர்கள், வணிகர் சங்கத்தினர் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் நேரில் வருகை தந்து ஆதரவு தெரிவித்துப் பேசினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கடையடைப்பு

போராட்டத்தை முன்னிட்டு கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மூலக்கடை, தங்கம்மாள்புரம் மற்றும் வருசநாடு ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களைத் தவிர்க்க 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இமயக்கமடைந்த போராட்டக்காரர்கள்

வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததன் காரணமாகப் போராட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குப் போராட்டக் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மலைக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் நில உரிமையையும் காக்க அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement -