Loading...

வாணியம்பாடி அருகே கலாம் பிறந்தநாள் விழா - இருளர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி

A

Admin

October 15, 2026 • 11:35 AM

வாணியம்பாடி அருகே கலாம் பிறந்தநாள் விழா - இருளர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி

வாணியம்பாடி அருகே கலாம் பிறந்தநாள் விழா - இருளர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி


வாணியம்பாடி அக் 16 


வாணியம்பாடி அருகே முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு- இருளர் குடும்பங்களுக்கு 

டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் பெரியபேட்டை அலுவலகத்தில் அண்ணாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மனித நேயப் பணியாக, 

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரிய பேட்டை பகுதியில் வீடு 

தீ விபத்தில் எரிந்து பாதிக்கப்பட்ட இருளர் இன குடும்பங்களுக்கு வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், அரிசி, மளிகை பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் உடைகள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் பசுமை நண்பன் சேதுராமன் தலைமை தாங்கினார். இதில் பசுமை நண்பர்கள், சதிஷ் குமார் .உமேஷ் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- Advertisement -