Loading...

விஐடி முன்னாள் மாணவர் சங்கம் இந்தூர் கிளை தொடக்கம்

A

Admin

October 16, 2026 • 11:31 AM

விஐடி முன்னாள் மாணவர் சங்கம் இந்தூர் கிளை தொடக்கம்

வேலூர் மாவட்டம்

விஐடி முன்னாள் மாணவர் சங்கம் இந்தூர் கிளை தொடக்கம்

வேலூர் அக்-17


வேலூர்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் விஐடி முன்னாள் மாணவர் சங்கத்தின் இந்தூர் கிளை தொடங்கப்பட்டது.
விஐடி முன்னாள் மாணவர் சங்கத்தின் 65-வது கிளையாக இந்தூர் கிளையை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வு விஐடி முன்னாள் மாணவர் வலையமைப்பை விரிவுபடுத்துவதில் மற்றொரு மைல்கல்லாக அமைந்தது.
இதில், இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி) இந்தூர் பதிவாளர் சிபா பிரசாத் ஹோதா, விஐடி போபால் பல்கலைக்கழக ஆலோசகரும், முன்னாள் சிபிஐ இயக்குநருமான ரிஷி சுக்லா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.
தொடக்க விழாவில் விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், விஐடி போபால் துணைவேந்தர் சதீஷ் குமார் மோத், இணை துணைவேந்தர் ஸ்ரீதரன், விஐடி முன்னாள் மாணவர் சங்கத்தின் இயக்குநர் கார்த்திகேயன் சிவசண்முகம், உதவி இயக்குநர் பாக்யவீரேஸ்வரன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்

- Advertisement -