விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாய்கரையை உடைத்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை பாயுமா
விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாய்கரையை உடைத்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை பாயுமா ?
விருதுநகர் அக் 26
கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருவதால் ஏரி குளங்கள் , கண்மாய் நீர் நிரம்பி காணப்படுகிறது இதனால் குளங்களை சுற்றி உள்ள குடியிறுப்புகளில் நீர்மட்டம் அதிகமாகியுள்ளது ஆனால் விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டி ஊராட்சி கிராமத்தில் இருக்கும் அரண்மனை கண்மாயை தூர்வாரப்படாமல் புதர் மண்டி காணப்படுகிறது மற்றும் அருகில் உள்ள பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர் இதனால் அந்த பகுதியே துர்நாற்றம் வீசுகிறது அருகில் உள்ள குடியிறுப்பு வாசிகளுக்கும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது இதனை கண்டும் காணாதது போல் ரோசல்பட்டி ஊராட்சி நிர்வாகம் அலட்சியப்படுத்தி காட்டி வருகின்றனர் பல முறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் மற்றும் கண்மாய முழுவதும் மழை நீர. தேங்கியுள்ளதை சமூக விரோதிகள் சிலர் கண்மாய் கரையை உடைத்து விட்டதால் தண்ணீர் முழுதும் வெளியேறியுள்ளது இதனால் இந்த பகுதிமக்கள் நீர் ஆதாரத்திற்க்கு பல கிலோ மீட்டர் சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர் . இந்த அவலநிலை சீரமைப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பெரிதும் எதிர் பார்க்கின்றனர் .