Loading...

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மோரை ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது

A

Admin

October 02, 2026 • 10:57 AM

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மோரை ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மோரை ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது, கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தூய்மையான குடிநீர் விநியோகித்தினை உறுதி செய்வது, பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம், சிறுபாசன குளங்கள், ஏரிகள், புதுப்பித்தல், ஜல் ஜீவன் திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதித்தல் நடைபெற்றது, மேற்கண்ட பொருட்கள் சம்பந்தமாகவும் கிராம ஊராட்சியின் வளர்ச்சியின் அவசியத்தை கருத்தில் கொண்டு வளர்ச்சிக்காக மக்களால் கொண்டு வரப்படும் சிறப்பு தீர்மானங்களையும் ஆலோசித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதால் அனைத்து தரப்பு பொதுமக்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள், பொது நல சங்க நிர்வாகிகள், வியாபார சங்க நிர்வாகிகள், அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு அங்கத்தினர்களும் வருகை தந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியில் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயல் அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டு அறிந்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தனர்.

- Advertisement -