Loading...

வேலூர் மாவட்டம் வேலூரில் ரோட்டரி சங்கம் மற்றும் வேலூர் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்!

A

Admin

November 02, 2026 • 12:33 PM

வேலூர் மாவட்டம்  வேலூரில் ரோட்டரி சங்கம் மற்றும் வேலூர் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்!

வேலூர் மாவட்டம் வேலூரில் ரோட்டரி சங்கம் மற்றும் வேலூர் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்! வேலூர் நவம்=03 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை செய்து பயன்! வேலூர் மாவட்டம், வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி வேலூர் அலுவலகத்தில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் கண்டறியும் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.ம. வினோத் கண்ணன், வேலூர் மாநகராட்சி ஆணையாளர் அ. கேத்திரின் சரண்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி முகாமை தொடங்கி வைத்தனர். இதில் வேலூர் மாநகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் பிரதாப் குமார், சத்துவாச்சாரி மாநகராட்சி மண்டலம் 2-ன் சுகாதார அலுவலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாக உறுப்பினர்கள் வெங்கடேஷ் சுப்பு, உதயசங்கர், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் சுரேஷ், ரோட்டரி நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் வேல்முருகன், ஆர்.எஸ். பிரபாகரன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வேலூர் ரெட் கிராஸ், வேலூர் செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் டி.எஸ். உதயசங்கர், செயலாளர் பர்வதா, பொருளாளர் (ஆடிட்டர்) பாண்டியன், மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இந்திர்நாத், மேலாளர் தீபன், கமிட்டி உறுப்பினர் வேல்முருகன், டிஜிட்டல் மேமோகிராபி ஒருங்கிணைப்பாளர் மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் உடனிருந்தனர். இந்த மருத்துவப் பரிசோதனை முகாமில் தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டப் பெண்கள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -