Loading...

ஶ்ரீ வல்லபை இராஜசேகரன் நினைவு கல்வி பரிசு மற்றும் தீபாவளி சேவை விழா தலைமை குருசாமி மோகன் தலைமையில் நடைபெற்றது!

A

Admin

November 02, 2026 • 06:15 AM

ஶ்ரீ வல்லபை இராஜசேகரன் நினைவு கல்வி பரிசு மற்றும் தீபாவளி சேவை  விழா   தலைமை குருசாமி மோகன் தலைமையில் நடைபெற்றது!

ஶ்ரீ வல்லபை இராஜசேகரன் நினைவு கல்வி பரிசு மற்றும் தீபாவளி சேவை விழா தலைமை குருசாமி மோகன் தலைமையில் நடைபெற்றது! ராமநாதபுரம், நவ.2- ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அருகே ‌ ஶ்ரீ வல்லபை ஐயப்பா சேவை நிலையம் சார்பாக ஶ்ரீவல்லபை இராஜசேகரன் நினைவு கல்வி பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஶ்ரீ வல்லபை தீபாவளி சேவை நிகழ்ச்சியில் ஶ்ரீ வல்லபை குழந்தைமார்கள் 2025-2026-ஆம் கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பில் 400-மதிப்பெண்ணிற்கு மேலும்,12- ஆம் வகுப்பில் 500-மதிப்பெண்ணிற்கு மேலும் பெற்று தேர்ச்சி பெற்ற குழந்தைகளுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தாடைகள் இனிப்புகள் வழங்கும் விழா வெகு சிறப்பாக கோயில் வளாகத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைமை குருசாமி மோகன் பரிசுகள் வழங்கி அறக்கட்டளை செயல்பாடுகள் குறித்தும் ஐயப்பன் சுவாமிமார்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விலக்கிப் பேசினார் ராமநாதபுரம் ராமலிங்க அன்பு இல்ல நிர்வாகி மோகன் உட்பட பலர் பங்கேற்றனர் இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்கும் சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளும் புத்தாடைகளும் இனிப்புகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் இதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

- Advertisement -