ஸ்ரீ வழிமறிச்சான் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மதுரை அக் 31 மதுரை மாநகர் மேலவாசல் பகுதியில் உள்ள ஸ்ரீ வழிமறிச்சான் சக்தி மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
ஸ்ரீ வழிமறிச்சான் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மதுரை அக் 31 மதுரை மாநகர் மேலவாசல் பகுதியில் உள்ள ஸ்ரீ வழிமறிச்சான் சக்தி மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கணபதி பூஜை, புண்யாஹ வசனம், தேவதா அனுக்ஞை, ஏகாதச ருத்ர ஜபம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, கும்ப பூஜைகள், முதற்கால ஹோமங்கள் நடைபெற்றன. இரவு 8.30 மணிக்கு பூர்ணாஹுதி நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் கால பூஜை, கண் திறப்பு, கலச பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றதை தொடர்ந்து பூர்ணாஹுதி, கும்ப புறப்பாடு நடைபெற்று, அம்மனுக்கு கும்பாபிஷேகம், சகல தீர்த்த அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் கோபால் செயலாளர் செல்லமுத்து பொருளாளர் ஆறுமுகம் துணைத் தலைவர் முருகேசன் உட்பட கோவில் நிர்வாகிகள் மற்றும் பூசாரி கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.