Loading...

அப்துல் கலாம் பிறந்தநாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு சுயசரிதைப் புத்தகம், எழுதுகோல், இனிப்புகள் வழங்கல்

A

Admin

October 16, 2026 • 11:36 AM

அப்துல் கலாம் பிறந்தநாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு சுயசரிதைப் புத்தகம், எழுதுகோல், இனிப்புகள் வழங்கல்

அப்துல் கலாம் பிறந்தநாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு சுயசரிதைப் புத்தகம், எழுதுகோல், இனிப்புகள் வழங்கல்


மதுரை அக்டோபர்;17


பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 96-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை மற்றும் முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு அப்துல் கலாம் அவர்களின் சுயசரிதைப் புத்தகங்கள், எழுதுகோல்கள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் மாநிலப் பொதுச் செயலாளர் முனைவர் சி. அர்சத் முபின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை தெற்கு போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் அ. தங்கமணி, சார்பு ஆய்வாளர் லிங்ஸ்டன், மதுரைக் கல்லூரி வாரிய உறுப்பினர் இல. அமுதன் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் கே. எஸ். நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு, கல்வியின் முக்கியத்துவம், இளைஞர்களின் முன்னேற்றம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய அரும்பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

மேலும், மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடித்து உயர்ந்த இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்றும், கல்வியின் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தொடர்ந்து, அப்துல் கலாம் அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் மாணவர்கள் இளைஞர் எழுச்சி உறுதிமொழி ஏற்றனர். மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் சுயசரிதைப் புத்தகங்களும், கல்விப் பயணத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் எழுதுகோல்களும், இனிப்புகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் மாநில தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் நம்ம மதுரை வினோ, கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் மாநிலத் துணைச் செயலாளர் சுரேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

- Advertisement -